த‌மிழக‌த்த‌ல் கட‌ந்த 20 மாத‌ங்க‌ளி‌ல் ரூ.15 ஆ‌யிர‌ம் கோடி முத‌லீடு: கருணாநிதி!

சனி, 2 பிப்ரவரி 2008 (18:29 IST)
தமிழக அரசு கடந்த 20 மாதங்களில் 12 வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தத‌ன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படுவதாக முதலமை‌ச்‌சர் கருணா‌நி‌தி கூ‌றி‌யு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல்‌ ஹூண்டாய் மோட்டார் நிறுவன‌த்‌தி‌ன் இர‌ண்டாவது கா‌ர் தொ‌ழி‌ற்சாலை தொட‌க்க‌விழா‌ இ‌ன்று நடைபெ‌ற்றது. இ‌‌ந்‌நிக‌‌ழ்‌ச்‌சி‌‌யி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருண‌ா‌நி‌தி கல‌ந்து கொ‌ண்டு தொ‌‌ழி‌‌ற்சாலை‌யை தொட‌ங்‌கி வை‌த்தா‌ர். ‌

பி‌னன‌ர் அவ‌ர் பேசு‌ம் போது, "ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இர‌ண்டாவது ஆலை மூலம் 5,000 தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், 6,700 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆட்டோ மொபைல் துறையிலும், எலக்ட்ரானிக்ஸ் துறையிலும், மென்பொருள் துறையிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தொழில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதற்கு காரணமாகும்.

தமிழக அரசு கடந்த 20 மாதங்களில் 12 வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.15 ஆயிரம் கோடி இங்கு முதலீடு செய்யப்படுகிறது. 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. மேலும் சில பெரிய கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடு செய்து தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்து கொள்ள முன் வந்துள்ளன.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. தொடர்ந்து தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். படித்து முடித்த இளைஞர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் தொழில் வளர்ச்சியின் பயன்கள் அவர்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்." எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்