தமிழ்‌ப் புத்தாண்டு தினத்தை மாற்றியதை எதிர்த்து உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு!

சனி, 2 பிப்ரவரி 2008 (18:24 IST)
தமிழக அரசு தமிழ்‌ப் புத்தாண்டு தினத்தை 'தை' மாதம் முத‌லதே‌‌தி எ‌அவசர சட்டத்தின் மூலம் மாற்றியதை எதிர்த்து சென்னை உய‌ர்‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல் தமிழ்நாடு சமூக சேவகர்கள் அமைப்பு பொதுநல வழக்கு தாக்கல் செய்து‌ள்ளது.

அந்த வழ‌க்கு மனுவில், "தை மாதம் முதல் தேதி தமிழ்‌ப் புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்படும் என்று ஆளுந‌ர் உரையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

தமிழக அரசு பொதுமக்களின் கருத்துக்களை தெரிந்து கொள்ளாமல் ஒருதலைபட்சமாக இந்த நடைமுறையை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இது தவறு. தமிழக அரசின் இந்த செயல் துரதிருஷ்டவசமானது. சட்ட விரோதமானதாகும்.

கடந்த சில நூற்றாண்டுகளாக சித்திரை மாதம் முதல் தேதியை தமிழ்‌ப் புத்தாண்டு தினமாக கொண்டாடி வருகின்றனர்.

இ‌ந்‌நிலை‌‌யி‌ல், 'தை' மாதத்தின் முதல் நாளே தமிழ் புத்தாண்டு தினம் என்று மாற்றியதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் உத்தரவிட வேண்டும்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்