‌பி‌ப்.10‌‌ இல்‌ திரு‌ச்‌சி காங். ‌‌‌‌‌நி‌ர்வா‌கிக‌ள் கூட்டம் : கிருஷ்ணசாமி!

சனி, 2 பிப்ரவரி 2008 (16:33 IST)
திருச்சி காங்கிரஸ் மண்டல முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக் கூட்டம் பிப்ரவரி 10 இ‌ல் நடைபெற உ‌ள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி காங்கிரஸ் மண்டல முக்கிய பிரமுகர்கள் சந்திப்புக் கூட்டம் ‌பி‌ப்ரவ‌ரி 10‌ம் தே‌தி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி பிஷப் ஈபர் மேல் நிலைப்பள்ளி அரங்கில் நடைபெறுகிறது.

இ‌ந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் க‌ட்‌சி‌யி‌ன் அகில இந்திய பொறுப்பாளர் வி.அருண்குமார் எம்.பி., காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரு‌ம், செயலாளருமான கே.பி. கிருஷ்ணசாமி மற்றும் மத்திய அமைச்சர்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்