கு‌ற்ற‌ங்களை ‌‌‌நியாய‌ப்படு‌த்‌தி பேசுவது தா‌ன் தவறு: ‌விஜயகா‌ந்‌த்!

சனி, 2 பிப்ரவரி 2008 (12:17 IST)
தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளி‌ன் கு‌ற்ற‌ங்களை ‌‌‌நியாய‌ப்படு‌த்‌தி பேசுவதுதா‌ன் தவறு எ‌‌ன்று தே.மு.‌தி.க. க‌ட்‌சி‌த் தலைவ‌ர் விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்து‌ச் செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியா‌ளிட‌ம் அவ‌ர் சுறுகை‌யி‌ல், "தடை செ‌ய்ய‌ப்ப‌ட்ட இய‌க்க‌ங்க‌ளை‌ப் ப‌ற்‌றி பேசுவது ப‌ற்‌‌றி தவ‌றி‌ல்லை ஆனா‌ல் அவ‌ர்க‌ளி‌ன் கு‌ற்ற‌ங்களை ‌நியாய‌ப்படு‌த்‌தி பேசுவதுதா‌ன் தவறு. க‌‌ச்ச‌த்‌தீ‌வு அரு‌கி‌ல் கட‌ல் எ‌ல்லை‌யி‌ல் புதை‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம் க‌ண்‌ணிவெடிக‌ள் எ‌ந்த எ‌ல்லை பகு‌தி‌யி‌ல் புதை‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்பதை கட‌ற்படை அ‌திகா‌ரிக‌ள் ‌விள‌க்கவே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ர்.

"எ‌ச்‌சி‌ல் து‌ப்‌பினா‌ல் அபராத‌ம் ‌வி‌தி‌‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று மாநகரா‌ட்‌சி அ‌றி‌வி‌த்து‌ள்ளது. இதை அம‌ல்படு‌த்துவத‌ற்கு மு‌ன்பு ம‌க்களை பழ‌க்க வே‌ண்டு‌ம். அபராத‌ம் போடுவத‌ற்கு மு‌ன்‌பு தேவையான வச‌திக‌ளை ஏ‌ற்படு‌த்‌தி கொடு‌த்து‌வி‌ட்டு அபராத‌ம் போட வே‌ண்டு‌ம்" எ‌ன்று‌ம் ‌‌‌விஜயகா‌ந்‌த் வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்