த‌மிழக சட்டபேரவை கூட்டம் ஒத்திவை‌ப்பு:அவை‌த் தலைவ‌ர்!

சனி, 2 பிப்ரவரி 2008 (11:51 IST)
கடந்த ஒரு வார காலமாக நடைபெ‌ற்ற தமிழக சட்டபேரவை கூட்டம் நேற்றுடன் முடிந்து மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் ஆவுடையப்பன் அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதலாவது கூட்டம், கடந்த 23‌ம் தேதி ஆளுந‌ர் உரையுடன் தொடங்கியது.

இதனை‌த் தொடர்ந்து 24‌ம் தேதி, ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது. விடுமுறை நாட்கள் தவிர்த்து ஜனவ‌ரி 28‌ம் தே‌தி முத‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 1‌ம் தே‌தி வரை சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது.

7 நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், நேற்று பகல், ஆளுந‌ர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார். அதன்பின் சட்டமன்றம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அவை‌த் தலைவ‌ர் இரா.ஆவுடையப்பன் அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்