பெட்ரோல் விலையை உயர்த்தினால் ஆதரவை வாபஸ் பெறுவோம்: க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்!

சனி, 2 பிப்ரவரி 2008 (11:47 IST)
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் மத்திய அரசுக்கு அ‌‌ளி‌த்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோ‌ம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி‌யி‌ன் தேசிய செயலாளர் டி.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

செ‌ன்னையில் செ‌ய்‌தியாள‌ர்களுக்கு பேட்டி அளித்த அவ‌ர் கூறியதாவது:

சர்வதேச‌ச் ச‌ந்தை‌யி‌‌ல் க‌ச்சா எ‌‌ண்ணை விலை ஏற்றத்தை காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தக்கூடாது. சுங்கம், கலால் வரியை குறைத்தல் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகள் மூலம் எண்ணை நிறுவனங்களின் இழப்பை சரி செய்ய வேண்டும்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நிலையில் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றக்கூடாது. எனவே, எ‌ந்த காரணத்தைக் கொண்டும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடாது. அதையும் மீறி உயர்த்தினால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்.

இந்நிலையில், அடுத்த வாரம் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பலவீனம் அடையும். அதன் காரணமாக மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்படும்.

இவ்வாறு அவ‌ர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்