‌மீனவ‌ர்களு‌க்கு கடலோர காவ‌ல்படை எ‌‌ச்ச‌ரி‌க்கை!

வெள்ளி, 1 பிப்ரவரி 2008 (18:16 IST)
இல‌ங்கை கட‌ல்‌பகு‌தி‌க்கு செ‌ன்று ‌மீ‌ன் ‌‌பிடி‌க்கு‌ம் புது‌க்கோ‌ட்டை மாவ‌ட்ட‌த்தைச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்களு‌க்கு கடலோர காவ‌‌ல் படை‌யின‌ர் அவ‌ர்க‌ளி‌ன் ந‌ல‌ன் கரு‌தி ‌சில தகவ‌ல்களை எ‌ச்ச‌ரி‌க்கையாக ‌விடு‌த்து‌ள்ளனர்.

மீன‌வ‌ர்க‌ள் ‌கடலு‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் போது ‌மீ‌ன் வ‌ள‌த் துறையா‌ல் வழ‌ங்க‌ப்ப‌ட்டு‌ள்ள அடையாள அ‌ட்டையை உட‌ன் எடு‌த்து‌ச்செ‌ல்ல வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌றி‌வுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கட‌லி‌‌ல் ‌மீ‌ன் ‌பி‌டி‌‌த்து‌க்கொ‌ண்டிரு‌க்கு‌ம் போது கடலோர காவ‌‌ல்படை, ‌பிற பாதுகா‌ப்பு அமைப்பின‌‌‌ர் வ‌ந்து ‌விசா‌ரி‌க்கு‌ம் போது உ‌ரிம‌‌ம், படகுப் பதிவு சான்றிதழ் ஆ‌கியவ‌ற்றை கா‌‌ண்‌பி‌க்க வே‌ண்டு‌ம்.

தீ‌விரவா‌திகளா‌ல் ஆப‌த்து ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளதாக ‌‌இல‌ங்கை ராணுவ‌த்த‌ா‌ல் விடு‌க்க‌ப்படு‌ம் மு‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை தகவலை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு ‌மீனவ‌ர்க‌ள் த‌மிழக க‌ட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் ம‌ட்டுமே ‌‌மீ‌ன் ‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்.

கட‌‌‌‌லி‌ல் பு‌திதாக ச‌ந்தேக‌‌த்‌து‌க்‌கிடமான நடவடி‌க்கைக‌ளி‌ல் யாரு‌ம் ஈடுபடு‌‌ட்டா‌ல் உடனே காவ‌ல் துறை‌‌க்கு தகவ‌ல் தெ‌ரி‌‌வி‌க்க வே‌ண்டு‌ம். ‌மீனவ‌ர்‌க‌ள் த‌ங்களது ‌மீ‌ன்‌பிடி படகை யாரு‌‌க்காவது ‌வி‌ற்பனை செ‌ய்தா‌ல் அ‌ந்த தகவலை ‌மீ‌ன்வள இலாகாவு‌க்கு‌ம், கடலோர காவ‌ல் படை‌யினரு‌க்கு‌ம் தகவ‌ல் தெ‌ரி‌‌வி‌க்க வே‌ண்டு‌ம். எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்