தை முத‌ல் நா‌ள் த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு: விசுவ இந்து பரிஷத் எ‌‌தி‌ர்‌ப்பு!

வியாழன், 31 ஜனவரி 2008 (12:49 IST)
''தை முத‌ல் நா‌ள் த‌மி‌‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு அறிவிப்பை த‌மிழக அரசு திரும்ப பெறவேண்டும்'' என்று விசுவ இந்து பரிஷத்தின் அ‌கில உலக செயல்தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.

திரு‌ச்‌சி‌யி‌ல் அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌‌ல், தை 1ஆ‌ம் தேதியை வட மாநிலங்களில் மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறார்கள். இது அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. எனவே தமிழ் வருட பிறப்பாக அதனை தமிழக அரசு அறிவித்‌திருப்பது சரி அல்ல. இது ஒரு அரசியல் த‌ந்‌திர‌ம் ஆகும்.

கிரகங்களின் சுழற்சி அடிப்படையிலும், விஞ்ஞானபூர்வமாவும் பார்த்தால் சித்திரை முதல் தேதி தமிழ் வருட பிறப்பு என்பது தான் சரியானது ஆகும். தமிழக அரசு இதுபற்றி யாருடனும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பினை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். இதுபற்றிய கண்டன தீர்மானம் வரு‌ம் பிப்ரவரி மாதம் 2, 3 ஆ‌கிய தேதிகளில் மதுரையில் நடைபெற உள்ள விசுவ இந்து பரிஷத் மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்படும்.

ராமர் சேது பாலம் பிரச்சினையில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதித்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கவேண்டும். ராமர் பாலம் பிரச்சினையில் நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளப்படவேண்டும் எ‌ன்று வேதா‌ந்த‌ம் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்