த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் ‌விடுதலை: அரசு தகவ‌ல்!

புதன், 30 ஜனவரி 2008 (15:31 IST)
சி‌றில‌ங்ககட‌ற்படை‌யினரா‌லகட‌த்‌தி‌சசெ‌ல்ல‌ப்ப‌ட்ராமே‌ஸ்வர‌த்தை‌சசே‌ர்‌ந்த 12 ‌மீனவ‌ர்களு‌ம் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌வி‌ட்டதாச‌ட்ட‌பபேரவை‌யி‌லஇ‌ன்றஅமை‌ச்ச‌ரஆ‌ற்காடு ‌வீராசா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

இது கு‌றி‌த்தஅவ‌ரகூறுகை‌யி‌ல், "அ‌ண்மை‌யி‌லராமே‌ஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களும், 3 விசை படகுகளுட‌ன் ‌சி‌றில‌ங்ககடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டன‌். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்‌க் கட்சியினரும், தோழமை கட்சியினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதஏ‌ற்று, அந்த மீனவர்களை விடுவிக்க த‌மிழஅரசு ‌‌தீ‌விநடவடிக்கை எடுத்தது. முதல்வர் கருணாநிதி கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மத்திய அரசிடம் பேசினார். நேற்று இரவும் இதுபற்றி பேசி, உடனடியாக தமிழக மீனவர்களை விடு‌வி‌க்நடவடி‌க்கஎடு‌க்வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும், 3 படகுகளுட‌ன் ‌சி‌றில‌ங்கஅரசு இன்று விடுவித்துள்ளது" எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்