எம்.ஜி.ஆர். பெயரை விஜயகாந்த் பயன்படுத்த கூடாது!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:48 IST)
''அர‌சிய‌ல் லாப‌த்து‌க்காக எ‌ம்.‌ஜி.ஆ‌ர். பெயரை ‌விஜயகா‌ந்‌த் பய‌ன்படு‌த்த கூடாது'' எ‌ன்று எ‌ம்.‌‌‌ஜி.ஆ‌ர். மருகம‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து எம்.ஜி.ஆர். மருமகன் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.ஜி.ஆருடன் எந்தத் தொடர்போ சம்பந்தமோ இல்லாத நடிகர் விஜயகாந்‌த். பேனர்களிலும் விளம்பரங்களிலும் அவரது கட்சித் தொண்டர்கள் மூலமாக `கருப்பு எம்.ஜி.ஆர்.' என்ற வார்த்தை விளம்பரப் படுத்தப்பட்டதேயன்றி எந்தப் பொதுமக்களும் அவரை `கருப்பு எம்.ஜி.ஆர்.' என்று அழைத்ததில்லை. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர். வாழ்ந்த காலத்தில் அவரோடு எந்தவித தொடர்புமின்றி எதிர்முகாமில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முகவரி பெற்று விட்டு தற்போது எம்.ஜி.ஆர். பெயரை தன் சுய லாபத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பயன்படுத்துவது முதலமைச்சராக விரும்பும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு அழகல்ல.

கடைசிவரை அரசியலிலும் ஆட்சியிலும் தன் உறவினர்கள் யாரையும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஈடுபட அனுமதிக்காத எம்.ஜி.ஆர். எங்கே? எடுத்த எடுப்பிலேயே தனது கட்சியின் இணைத் தலைவராக தனது மனைவியையும், கட்சிப் பொறுப்பில் தனது மைத்துனரையும் முன்னிறுத்தி பங்கேற்ற முதல் தேர்தலிலேயே வேட்பாளராகவும் நிறுத்தி தன் சுய ரூபத்தைத் தெளிவாக்கிய விஜயகாந்த் எங்கே?

இனிமேலும் எம்.ஜி.ஆர். பெயரையோ ஜானகி அம்மையார் பெயரையோ தவறாகப் பயன்படுத்துவதை விடுத்து அ.தி.மு.க.விற்குச் சொந்தமான பிரச்சார வாக னத்தை அக்கட்சியிடம் உடனே ஒப்படைத்து விட்டு அரசியல் நாகரீகம் காப்பதே தே.மு.தி.க. கட்சித்தலைவர் விஜயகாந்திற்கு அழகு என்பதை அறிவுறுத்த கடமைப்பட்டுள்ளேன் எ‌ன்று அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்