இயற்கை வள‌ங்களை அழித்து விட்டு துணை நகரம் எதற்கு? ராமதாஸ்!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (10:00 IST)
''இயற்கை வளங்களை அழித்து விட்டு துணை நகரம் எதற்கு?'' என்று மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌ப்போரூ‌ரி‌ல் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் கர்ணன்-இந்திரா ஆகியோரின் திருமண விழாவில் பா.ம.க நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகை‌யி‌ல், எந்த திட்டத்திற்கும் நான் முட்டுக்கட்டை போடுவதாக கூறுகிறார்கள். இந்தப் பகுதியில் துணை நகரம் அமைக்கப் போவதாக சொன்னார்கள். சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இங்கு உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு ஒரு கோடியில் இருந்து 2 கோடி வரை.

ஆனால் அரசே எடுத்து இருந்தால் ஒரு லட்சமோ, 2 லட்சமோதான் கொடுத்திருக்கும். இயற்கை வளங்களை அழித்து விட்டு துணை நகரம் எதற்கு? வேண்டுமானால் புதிய, பழைய மகாபலிபுரம் சாலைகளில் ஏராளமான பண்ணை முதலாளிகள் உள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளில் சிறு, சிறு நகரங்களை அமையுங்கள்.

பெண்களுக்கு கல்வி, அதிகாரம் ஆகியவை கிடைத்ததற்கு காரணம், பெரியாரின் முழக்கம்தான். சிசுகொலையால் ஆயிரம் ஆண்களுக்கு 850 பெண்கள்தான் உள்ளனர். பெண் குழந்தைகளை அழிக்காதீர். அரசு தொட்டில்களில் போடாதீர் எ‌ன்று ராமதா‌‌ஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்