அரசு பேரு‌ந்து‌க‌ளி‌ல் ஆ‌ங்‌கில எழு‌த்து‌க்களை அ‌ழி‌த்த 12 பே‌ர் கைது!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (15:43 IST)
செ‌ன்னை கோய‌ம்பே‌ட்டி‌ல் அரசு ‌விரைவு பேரு‌ந்துக‌ளி‌ல் எழு‌த‌ப்ப‌‌ட்டிரு‌ந்த ஆ‌ங்‌கில எழு‌த்‌து‌க்களை கரு‌ப்பு மையா‌ல் அ‌ழி‌த்த 22 பே‌‌ரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்தன‌ர்.

மொழிப்போர் தியாகிகள் தினம் த‌மிழக‌ம்‌ முழுவது‌ம் இ‌ன்று அனுசரிக்கப்படுகிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் செ‌ன்னை கோய‌‌ம்பேடு பே‌‌ரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌‌ற்கு இ‌ன்று 22 பே‌ர் ‌கொ‌ண்ட ஒரு கு‌ம்ப‌ல் செ‌ன்றது.

அ‌ந்த கு‌ம்ப‌ல் ‌திடீரென அ‌ங்கு பேரு‌ந்துக‌ளி‌ல் எழுத‌ப்ப‌‌ட்டிரு‌ந்த ஆ‌ங்‌கில எழு‌த்து‌க்களை கரு‌ப்பு மையா‌ல் அ‌ழி‌த்தது.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌ந்‌த காவ‌ல்துறை‌யின‌ர் ‌விரை‌ந்து வ‌ந்து அ‌ந்த கு‌ம்பலை கைது செ‌ய்தன‌ர். அவ‌ர்க‌ளிட‌ம் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்