தமிழக மகளிர் குழுக்களுக்கு 5 கைத்தறி ஏற்றுமதி மண்டலங்கள்: மத்திய அமைச்சர் தகவல்!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (11:11 IST)
''தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கென்று பிரத்யேகமாக 5 கைத்தறி ஏற்றுமதி மண்டலங்களை உருவாக்மத்திய அரசு திட்டமிட்டுள்ளது'' என்று மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌மிழக‌ கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ரசாயனக் கலப்பில்லா இயற்கை பருத்தியால் தயாரிக்கப்பட்ட ஆயத்த ஆடைகள் மற்றும் துணி வகைகளை சென்னையில் அறிமுகம் செய்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மக‌ளி‌ரசுயஉத‌வி‌ககுழு‌க்களு‌க்காநாகர்கோவில், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விருதுநகர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சிறப்பு கைத்தறி ஏற்றுமதி பொருளாதார மண்டலங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் காஞ்சிபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் கைத்தறி ஏற்றுமதி மண்டல‌த்தவரும் பிப்ரவரி‌யிலு‌ம், நாகர்கோவில் கைத்தறி ஏற்றுமதி மண்டல‌த்தை ஏப்ர‌லிலு‌மதுவக்கத் திட்டமிட்டுள்ளது.

தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரசாயனக் கலப்பில்லா இயற்கைப் பருத்தி ஆடைகளுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரும் வரவேற்பு உள்ளது. ஆனால் இந்த தயாரிப்பு பொருட்களுக்கு எஸ்.ி.எஸ். சான்றிதழ்கள் பெறுவது அவசியம். அதற்கான முயற்சிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். இந்த சான்றிதழ் வழங்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 11 நிறுவனங்க‌ள் உள்ளன. இந்த அங்கீகாரம் பெறும் பட்சத்தில் ஏற்றுமதி வாய்ப்புகளும் பிரகாசமாகும்.

இந்தியாவில் உள்ள கைத்தறி நிறுவனங்களில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. 2007-08 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் ரூ.94 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம் ரூ.120 கோடியை எட்டியுள்ளது. தற்போது இயங்கி வரும் சுமார் 1,232 கைத்தறி நிறுவனங்களில் 1,000-க்கும் மேலானவை லாபகரமாக இயங்கி வருகிறது.

இந்தியாவில் த‌ற்போதஉற்பத்தி செய்யப்படும் பருத்தி வகையில் 60 ‌விழு‌க்காடு பி.டி. வகையை சேர்ந்தது. இதனால் கைத்தறி து‌ணி‌களு‌க்காமூலப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் அபாயம் உள்ளது. இதிலிருந்து கைத்தறி நெசவாளர்களை காப்பாற்ற மத்திய- மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும்.

ஈரோ‌ட்டி‌லவடிவமை‌ப்பு ‌்டூடியோ!

கைத்தறி துறையை மேம்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரு‌பல்வேறு நவீன நடவடிக்கைக‌‌ளி‌னஒரபகு‌தியாக‌, கைத்தறி ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில் மூலம் புதிதாக வடிவமைப்பு ஸ்டூடியோக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஒரு ஸ்டூடியோ அமைப்பதற்காக முதல்கட்ட நிதியுதவியாக ரூ.2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் 13 ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. இதில் 6 ஜவுளி பூங்காக்கள் தமிழகத்தில் அமைக்கப்படும்.

இவ்வாறு மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்