மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம்: இந்திய கம்யூனிஸ்ட்!
வெள்ளி, 25 ஜனவரி 2008 (10:49 IST)
''மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்'' என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் பேசுகையில், சேது சமுத்திர திட்டம் உடனடியாக நிறைவேற வேண்டும். மத்திய அரசின் நிதிக்குழுக்கள் நிதி பகிர்வு குறைக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் தான் வழங்கும் என்று கூறப்படுகிறது. இது போதாது, கூடுதலாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலவரியை ரத்து செய்ய வேண்டும். குத்தகைதாரர்களாக இருந்தால் குத்தகையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.