ரூ.160‌க்கு அய‌ல்நா‌ட்டு சிமெண்‌ட் மூட்டை: த‌‌மிழக அரசு ஏ‌ற்பாடு!

வெள்ளி, 25 ஜனவரி 2008 (10:33 IST)
அய‌ல்நாடுக‌ளி‌ல் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்‌ட் மூட்டை ஒன்றுக்கு ரூ.160-க்கு விற்பனை செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அய‌‌ல் நாட்டில் இருந்து சிமெண்‌ட் இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்து உள்ளது. சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் வரை இறக்குமதி செய்யப்பட்ட ஓ.பி.சி., 43 கிரேடு சிமெண்டின் தோராயமான விலை மூட்டை ஒன்றுக்கு ரூ.160 ஆகும். கட்டுமானப்பணிகளை ஏற்று நடத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டடம் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர், பொதுமக்கள், தமது சிமெண்‌ட் தேவைகளை தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்திடம் பதிவு செய்து கொள்ளலாம்.

குறைந்த பட்சம் ஒரு கண்டெய்னர் (24 டன்) (480 மூட்டைகள்) பதிவு செய்து கொள்ள வேண்டும். துறைமுகத்தில் கையாளும் செலவு மற்றும் போக்குவரத்துச் செலவு, தர ஆய்வு சோதனை செலவு ஆகியவை வாங்குவோரைச் சார்ந்தது ஆகும்.

இறக்குமதி சிமெண்‌ட் வாங்க விரும்புவோர் பின் வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ''பொது மேலாளர் (விற்பனை), தமிழ்நாடு சிமெண்ட‌் கழகம் (டான்செம்), எல்.எல்.ஏ.பில்டிங், 2-வது தளம், 735, அண்ணா சாலை, சென்னை-600002. தொலைபேசி எண்:-044 28525477. எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்