சிமெண்டுக்கு விண்ணப்பம் பெறுவது எங்கே?

திங்கள், 21 ஜனவரி 2008 (10:35 IST)
அரசின் சலுகை விலை சிமெண்‌ட் பெற எ‌ங்கே ‌‌வி‌ண்ண‌ப்‌ப‌ம் பெற வே‌ண்டு‌ம் எ‌ன்று கு‌றி‌‌த்து செ‌ன்னை ஆ‌ட்‌சிய‌ர் ஆ‌ர்.ஜெயா ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌‌ள்ளா‌ர்

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழக அரசின் சலுகைவிலை சிமெண்‌ட் பெறுவதற்கான விண்ணப்ப மனுக்கள் நேற்று (20ஆ‌ம் தே‌தி) முதல் சென்னை மாவட்டத்தில் உள்ள 5 வட்டாட்சியர் (தாசில்தார்) அலுவலகங்களில் அலுவலக நேரங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

மனுதாரர்களால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் 1.7.2007-க்கு பிறகு ஒப்புதல் பெறப்பட்ட கட்டட வரைபடம் இணைத்தோ அல்லது ஒப்புதல் பெறப்பட்ட கட்டட வரைபடம் இன்றியோ சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மனுதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு சிமெண்‌ட் வழங்க ஒதுக்கீட்டு ஆணை சம்பந்தப்பட்ட தலைமையிடத்துத் துணை வட்டாட்சியரால் தாமதமின்றி வழங்கப்படும்.

சிமெண்‌ட் ஒதுக்கீட்டு ஆணையில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் சிமெண்‌ட் ஒதுக்கீட்டு ஆணையினை அளித்து அதிகபட்சமாக 100 மூட்டைகள் வரை மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வீதம் வழங்கி வரைவோலையாக செலுத்தி பொதுமக்கள் சிமெண்‌ட் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எ‌ன்று ஆ‌ட்‌சிய‌ர் ஜெயா கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்