ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ளி‌ன் து‌ன்ப இரு‌ள் மறை‌ந்து தை‌த்த‌ிருநா‌ளி‌ல் வ‌ழி அமை‌ய‌ட்டு‌ம்: தல‌ைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌ழ்‌த்து!

திங்கள், 14 ஜனவரி 2008 (17:49 IST)
''கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும், இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகி‌ன்றோ‌ம்'' எ‌ன்று அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் பொ‌ங்க‌ல் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தமிழஆளுந‌ரபர்னாலா : அறுவடதிருநாளாமபொங்கலநன்னாளிலதமிழமக்களஅனைவருக்குமஎன்னுடைஇதயங்கனிந்வாழ்த்துகளை தெரிவித்துககொள்கிறேன். இந்திருநாளானதஒற்றுமமற்றுமநல்லிணக்உணர்வுகளஏற்படுத்தி அமைதியையும், செழிப்பையுமகொண்டவரட்டும்.

ஜெயலலிதா (அ.தி.மு.க. பொதுச் செயலாளர்) : மங்கலப் பொங்கல் திருநாளை உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர்களின் வாழ்க்கைக்கு கிடைத்த நம்பிக்கைக்குரிய அரிய பொன் மொழியாகும். அதன்படி, தை வந்தால் நமக்கு ஒரு பொன்னான எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையோடு இன்முகம் காட்டி இத்திருநாளை அனைவரும் இருகரம் கூப்பி இனிதே வரவேற்போம்.

இந்த பொங்கல் நன்னாளில் அனைவரது இல்லங்களிலும் பொங்கல் பொங்கட்டும்! மகிழ்ச்சி நிரந்தரமாகத் தங்கட்டும்! வளம் கொழிக்கட்டும்! நலம் தழைக்கட்டும்! புது வாழ்வு பூத்துக் குலுங்கட்டும்! என மனமார வாழ்த்தி என் அன்புக்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

கிருஷ்ணசாமி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்) : தமிழர் தம் இல்லந்தோறும், உள்ளந்தோறும் பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட இன்று பூரிப்போடு கொண்டாடப்படுகிறது. தைத்திருவிழா. உழவர் பண்டிகை என்றே ஆயினும் இது ஜாதி, இன, மொழி, மத வேறுபாடுகள் கடந்து அனைவரையும் ஒற்றுமை உணர்வோடு ஈர்த்து மகிழ வைக்கும் பண்டிகை நாள். தன்னோடும், மண்ணோடும் சேர்ந்து உழைத்துக் களைத்த கால்நடைகளை உற்சாகப் படுத்த ஒருநாளும், உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு ஒன்று கூடி உண்டு மகிழ காணும் பண்டிகை என ஒருநாளும், பழைய தீயவைகளை அகற்றி, புதிய நல்லவைகள் மலர போ(க்)கி பண்டிகை என ஒரு திருநாளுமாக தமிழர் தம் கலாச்சாரப் பண்போடு-ஐயன் வள்ளுவப் பெருந்தகையின் கருத்துரை நெறியோடு வழக்கமாக கொண்டாடப்படும் இந்த தைத் திருநாளான இன்றே போல் என்றும் அனைவரும் மகிழ்ச்சியோடும், எழுச்சியோ டும் குறைவின்றி வாழ அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அமை‌ச்ச‌ர் ‌ஜி.கே.வாசன் : தமிழர்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்துவதில் தலையானவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பயிர்கள் செழிக்க வெப்பத்தையும், வெளிச்சத்தையும் தந்து உதவுகின்ற ஆதவனை போற்றும் திருநாள் பொங்கலாகவும், உழவனுக்கு உற்ற நண்பனாக இருந்து உழவுக்கு உழைக்கும் கால்நடைகளை நன்றியோடு போற்றும் திருநாள் மாட்டு பொங்கலாக வும், நட்புக்கும் உறவுக்கும் உறுதுணையாகவும், சகோதரத் துவத்தை வளர்க்கும் திருநாள் காணும் பொங்கலாகவும் நாம் கொண்டாடுகிறோம். விவசாயி களின் வாழ்வில் புதுப்பொலிவு பொங்கட்டும், நெஞ்சங்களில் இனிமை தங்கட்டும்.

வைகோ (ம.தி.மு.க.பொதுச் செயலாளர்) : ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்துளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும். இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன்.

முன்னாள் மத்திய அமை‌ச்ச‌ர் திருநாவுக்கரசர் : தமிழர் திருநாள் இந்நாளில் உலகில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவ‌ழி தமிழர்களின் இன்னல்கள் அகன்று, மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்வோம். தமிழர்களின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட இந்த பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொ‌ல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் தலைவர்) : 'பொங்கல் திருநாள்' என்னும் இந்த ஒரே திருநாளை, தமிழினத்தின் பண்பாட்டு அடையாளமாகப் பாதுகாத்து வருவது ஆறுதல் அளிக்கிறது. இத்தகைய பாரம்பரிய பெருமைக்குரிய பண்பாட்டுத் திருநாளில், உலகமெங்கும் வாழுகிற தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சிப் பொங்கவும், தமிழீழம் விரைவில் மலரவும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

ஏ.சி. சண்முகம் (புதிய நீதிக்கட்சித் தலைவர்) : இந்த தைத்திங்கள் முதல் நாளே, நம் தமிழர்களின் தமிழ் புத்தாண்டு தினம் என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்ற தைத்திங்கள் திருநாள், மற்றும் வான்புகழ் கொண்ட உலக பொதுமறையும் திருக்குறளை நமக்கு தந்த திருவள்ளுவர் பிறந்த நன்நாள் ஆகிய இருபெரும் திருநாட்களுக்கும் தமிழ் கூறும் நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜெகத்ரட்சகன் (ஜனநாயக முன்னேற்ற கழக தலைவர்) : தை திங்கள் முதல் நாளை தமிழ் ஆண்டின் பிறந்தநாளாக தமிழக முதல்வர் அறிவிக்க போகும் செய்தி இந்த பொங்கலை இனிக்க செய்யும் செய்தியாகும். தமிழகத்தில் நல்லாட்சி நடக்கும் இந்த வேலையில் எல்லா தரப்பு மக்களும் பூரித்துப் பொங்கும் மனதோடு நெஞ்சம் நிறைந்தும் சமத்துவ பொங்கலை கொண்டாடும் இவ்வேளையில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ம‌க்களுக்கு ஜனநாயக முன்னேற்ற கழகம் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோ‌ல், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பன், திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் மரு‌த்துவ‌ர் கிருஷ்ணசாமி, வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், தலித் மக்கள் முன்னணி இயக்க தலைவர் குமரி அருண், அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் மத்தியாஸ் உள்பட ப‌ல்வேறு அர‌சிய‌ல் க‌ட்‌சி‌யின‌ர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்