2007-08ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான ‌விருதுக‌ள் அ‌றி‌வி‌ப்பு!

திங்கள், 7 ஜனவரி 2008 (15:44 IST)
2007-08ஆ‌மஆ‌ண்டி‌ற்காதிருவள்ளுவர் விருது உள்ளிட்ட விருதுகளமுதலமைச்சர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாத‌மிழஅரசவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌ககு‌றி‌ப்‌பி‌ல், 2008ஆம் ஆண்டிற்கான `திருவள்ளுவர் விருது’ குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரு‌க்கவழ‌ங்க‌ப்படு‌கிறது.

2007ஆம் ஆண்டி‌ற்காசமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது - கவிதைப் பித்தன்;

அறிஞர் அண்ணா விருது - பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன்;

பெருந்தலைவர் காமராசர் விருது - தமி‌ழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் பட்டுக்கோட்டை ஏ.ஆர்.மாரிமுத்து;

பாரதியார் விருது - கவிஞர் சௌந்தரம் கைலாசம்;

தமிழ‌‌ததென்றல் திரு.வி.க. விருது- முனைவர் த.பெரியாண்டவ‌ன்;

பாவேந்தர் பாரதிதாசன் விருது- திருச்சி எம்.எஸ். வெங்கடாசலம்;

முத்தமி‌ழ்‌ககாவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது - கவிஞர் வேழவேந்தன் ஆ‌கியோரு‌க்கவழங்க‌ப்படு‌மஎ‌ன்றமுதலமைச்சர் கருணா‌நி‌தி அறிவித்துள்ளார்.

2007ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது வழங்குவதற்கு, அதற்கென முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள
உயர்நிலைக் குழுக் கூட்டம் 9.1.2008 அன்று நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் முடிவு செ‌ய்து டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு உரியவர்
தேர்வு செ‌ய்யப்பட்டு அறிவிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் கருணா‌‌நி‌தி தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்