சத்தி வனப்பகுதியில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

திங்கள், 7 ஜனவரி 2008 (10:08 IST)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டத்திற்கு உட்பட்டது சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தாளவாடி மற்றும் ஆசனõர் வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் விலங்குகளின் எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கணக்கெடுப்பில் மாவட்ட வனஅதிகாரி எஸ்.இராமசுப்பிரமணியம் தலைமையில் சத்தியமங்கலம் ரேஞ்சர் எஸ்.ஜி.சுந்தரராஜன் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கணக்கெடுப்பில் சிறுத்தை, கரடி மற்றும் செந்நாய்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரிவந்துள்ளது. மேலும் புலிகளின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

சத்தியமங்கலம் பேளேரி வனப்பகுதியில் ஒரு புலியையும், வடவள்ளி கசிவுநீர்குட்டையில் தண்ணீர் குடிக்கும்போது ஒரு புலியையும், தெங்குமரஹடா வில் இருந்து கூலித்துறைப்பட்டிக்கு இடையில் ரோட்டில் நடந்த சென்ற புலியையும், தமிழ்நாடு, கர்நாடகா எல்லை பகுதியில் ரோட்டை கடந்த ஒரு புலியையும் மொத்தம் நான்கு புலிகளை பார்த்துள்ளனர்.

webdunia photoWD
இதேபோல் பல இடங்களில் காட்டெருமைகளை சாதாரணமாக பார்த்துள்ளனர். காட்டுயானைகள் அதிகரித்துள்ளதும் குறிப்பாக தந்தத்துடன் உள்ள ஆண்யானைகள் அதிகமாக காணப்பட்டுள்ளது.