மோடி, மாயாவ‌தி வ‌ழி‌யி‌ல் ஆ‌ட்‌சியை‌ப் ப‌ிடி‌ப்பே‌ன்: ‌விஜயகா‌ந்‌த்!

Webdunia

சனி, 29 டிசம்பர் 2007 (11:56 IST)
தே‌‌ர்த‌லி‌ல் கூ‌ட்ட‌ணி அமை‌க்கு‌ம் வா‌ய்‌ப்‌பி‌ல்லை எ‌ன்று‌ம், நரே‌ந்‌திர மோடி, மாயாவ‌தி வ‌ழி‌யி‌ல் ஆ‌ட்‌சியை‌ப் ‌பிடி‌க்க‌ப் போவதாகவு‌ம் தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் கூ‌றினா‌ர்.

இதுகு‌‌றி‌த்து நா‌ளித‌ழ் ஒ‌‌ன்றிற்‌க்கு அவ‌ர் அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், "மோடியும் மாயாவதியும் சாதாரண ஏழை மக்களையே சார்ந்து நின்றனர். இதுவே அவர்களுக்கு தேர்தலில் மக்கள் வெற்றியைத் தந்தனர். ஆனால் நா‌ன் அரசியல் ஆதாயத்துக்காக ஜாதி, மத இன பிரசாரத்தை பயன்படுத்த மாட்டேன்" எ‌ன்றா‌ர்.

காங்கிரசுடன் விஜயகாந்த் கூட்டு வைத்துக் கொள்வார் என்று வெ‌ளியான செ‌ய்‌திக‌ள் பற்றி அவ‌ர் பதிலளிக்கை‌யி‌ல், "சோனியா காந்தியையோ, அல்லது தி.மு.க. தலைவர் கருணாநிதியையோ நான் சந்திக்கவில்லை. அவர்களும் என்னை சந்திக்கவில்லை.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தவரை அவர்களாக எந்த முடிவும் எடுக்க முடியாது. கட்சி மேலிடம்தான் அவர்களுக்கு உத்தரவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்" எ‌ன்றா‌ர்.

உங்கள் தலைமையிலான கூட்டணியை பாரதீய ஜனதா ஏற்றுக் கொள்ளுமா? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, " மதவாத கட்சியுடனும் ஜாதி அடிப்படையிலான கட்சியுடனும் நான் கூட்டணி அமைக்கப் போவதில்லை. இது இறுதியானது" எ‌ன்றா‌ர்.

சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் அகில இந்திய பார்வர்டு பிளாக், ம.தி.மு.க., பா.ம.க. ஆகியவற்றுடன் கூட்டு உண்டா? எ‌ன்று கே‌ட்டத‌ற்கு, "முத‌லிர‌ண்டு க‌ட்‌சிகளை‌ப் பொறு‌த்தவரை அரசியலில் அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பதையும் மக்கள் அவர்களை ஆதரிக்கிறார்களா என்பதையும் முதலில் அவர்கள் நிரூபிக்கட்டும். மேலு‌ம், அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொள்ளும் கட்சிகளுடன் தே.மு.தி.க. உறவு வைத்துக் கொள்வது இல்லை" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "எனது பலத்தை நான் உணர்ந்து இருக்கிறேன். மக்கள் நம்பிக்கையும் எனக்கு உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களை நான் மதிக்கிறேன்.

தமிழ்நாட்டில் தனிக்கட்சி ஆட்சிவரும் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு கூட்டணி ஆட்சி என்ற நிலை இருந்தது ஆனால் சமீபத்தில் நடந்த தேர்தல்களில் மாயாவதி, மோடி ஆகியோர் அந்த நிலையை மாற்றி இருக்கிறார்கள்" எ‌ன்றா‌ர் விஜயகாந்த்.

வெப்துனியாவைப் படிக்கவும்