சேலம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் 35 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

செவ்வாய், 25 டிசம்பர் 2007 (11:05 IST)
சேலம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகத்தில் நேற்று பெண்கள் கூட்டமாக கையில் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் பெரமனூர் அருகே உள்ளது காட்டுவளவு. இங்குள்ள பாவேந்தர் வீதியை சேர்ந்த மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலம் இதுவரை வழங்கப்படவில்லை.

அதிகாரிகள் வேண்டுமென்றே நிலம் வழங்காமல் பல ஆண்டுகளாக இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டியு‌‌ள்ளன‌ர். உடனடியாக ‌நில‌ம் வழ‌ங்க வ‌லியுறு‌த்‌தி, தீக்குளிப்பு போராட்டம் நடத்த மண்ணெண்ணை கேனுடன் நேற்று சேலம் மாவ‌ட்ட ஆ‌ட்‌சியர் அலுவலகம் வந்தனர்.

ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்த அப்பெண்களை காவ‌ல்துறை‌யின‌ர் தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணை கேன்களை பறிமுதல் செய்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அழகேசன் தீக்குளி‌க்க வந்த பெண்களிடம் விரைவில் தங்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

இதனால் கேனுடன் வந்த 35 பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்