மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட கடலூர் சென்ற முதலமைச்சர் கருணாநிதி அங்கிருந்து புதுச்சேரி சென்றார்.
கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் கருணாநிதி நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிட்டார்.
கடலூர் மாவட்டத்திற்கு வந்த முதலமைச்சர் கருணாநிதியை புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமியும், தொழில்துறை அமைச்சர் வி. வைத்தியலிங்கமும் புதுச்சேரிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அதை அடுத்து புதுச்சேரி சென்று சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் அங்கிருந்து கிளம்பினார்.