அரசு விடுமுறை நா‌ளி‌ல் பள்ளிக்கூடம் நடத்தினால் நடவடிக்கை: ஜெகநாத‌ன் எச்சரிக்கை!

Webdunia

சனி, 22 டிசம்பர் 2007 (09:57 IST)
''அரசு விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெகநாதன் எச்சரிக்கை விடுத்தார்.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ஜெகநாதன் கூறுகை‌யி‌ல், மழையின்போது மாணவர்களின் நலன்கருதியும் ஆசிரியர்கள் நலன் கருதியும் அரசு சிறப்பு விடுமுறை அறிவிக்கிறது. மேலும் நேற்று பக்ரீத் பண்டிகை அரசு விடுமுறை நாள் ஆகும். இப்படிப்பட்ட அரசு விடுமுறை நாட்களில் சில பள்ளிகள் பள்ளிகளுக்கு விடுமுறை விடாமல் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்துவதாக புகார்கள் வந்துள்ளன.

எனவே தமிழ்நாட்டில் இப்படி எந்தந்த பள்ளிகள் கனமழையின்போது அரசு சிறப்பு விடுமுறை அறிவித்த நாட்களில் வகுப்பு நடத்தின? பக்ரீத் அன்று எந்த பள்ளிகளில் விடுமுறைவிடப்படவில்லை என்பதை கணக்கெடுக்கும்படி முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இனிமேல் எந்த பள்ளியாவது அரசு விடுமுறை அறிவித்த நாட்களில் சிறப்புவகுப்பு என்ற பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று ஜெகநாத‌ன் எ‌ச்ச‌‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்