கோவை குண்டுவெடிப்பு வழக்கு: ஆயு‌ள் த‌ண்டனையை எதிர்த்து 42 பேர் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் அப்பீல்!

Webdunia

செவ்வாய், 18 டிசம்பர் 2007 (17:31 IST)
கோவை கு‌ண்டு வெடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ஆயு‌ள் த‌ண்டனை பெ‌ற்ற அ‌ன்சா‌‌ரி உ‌ள்பட 42 பே‌ர் த‌‌ண்டனையை எ‌தி‌ர்‌த்து செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் அ‌ப்‌‌பீ‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

1998ஆ‌ம் ஆ‌ண்டு கோவையில் நட‌ந்த தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பு வழ‌க்‌கி‌ல் அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்நாசர் மதானி உள்பட 166 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு ‌விச‌ா‌ரி‌த்த கோவை தனி ‌நீ‌திம‌ன்ற‌‌நீ‌திப‌தி, கடந்த செப்டம்ப‌‌ரி‌ல் ‌‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர். இதில், அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா, செயலாளர் அன்சாரி உள்பட 43 பேருக்கு ஆயுள்தண்டன விதிக்கப்பட்டது. 83 பேருக்கு 10 ஆண்டுக்குள் ‌சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இவர்கள் அனைவரும் 10 ஆ‌‌ண்டுக‌ள் சிறையில் இருந்ததால் தண்டனை காலம் கழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அப்துல்நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் ‌‌மீதான கு‌ற்ற‌‌ம்சா‌ற்று நிரூபிக்கப்படாததா‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அன்சாரி உள்பட 42 பேர் சென்னை உய‌ர் ‌‌நீ‌‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தனர். பாஷா மட்டும் அப்பீல் செய்யவில்லை. தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது. இவை ஆங்கிலத்தில் இருந்தது. தீர்ப்பு நகலை தமிழில் வழங்க வேண்டும் என்று கூறி பாஷா கோவை தனி ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் மனு செய்து உள்ளார். எனவே அவர் மட்டும் ஆயுள் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யவில்லை.

இத‌ற்‌கிடை‌யி‌ல் விடுதலை செய்யப்பட்ட 83 பேர் தங்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்