சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரான சதிகள் ‌விரை‌வி‌ல் முறியடி‌க்க‌ப்ப‌ட்டு ‌நிறைவே‌ற்ற‌ப்படும்: மத்திய அமை‌ச்ச‌ர் வேங்கடபதி!

Webdunia

புதன், 12 டிசம்பர் 2007 (15:51 IST)
''சேது சமுத்திர திட்டத்துக்கு இடையூறாக உள்ள தடைகள், சதிகள் விரைவில் முறியடிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்பது உறுதி'' எ‌ன்று ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் வே‌ங்கடப‌தி கூ‌றினா‌ர்.

கடலூர் நகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75-வது பிறந்தநாள் விழா‌வி‌லம‌த்‌திஅமை‌ச்ச‌ரவே‌ங்கடப‌தி கல‌ந்தகொ‌ண்டபேசுகை‌யி‌ல், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரால் திருஞான சம்பந்தர் என்று பெருமைபட அழைக்கப் பட்டவர் வீரமணி. தமிழன் யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. பெரியாரின் கொள்கைகளை பின்பற்றும் தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான். பெரியாரின் கொள்கைகளை சிறு வயதிலேயே ஏற்றுக்கொண்டவர் வீரமணி. திராவிட இயக்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு அரும்பணியாற்றி வருகிறார்.

பகுத்தறிவு கருத்துக்களை மக்களிடையே பரப்புவதில் தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி போல செயல்பட்டு வருகிறது. பிற்போக்கு வாதிகள் பதவிக்காக எதையும் செய்வார்கள். ராமரை வீதிக்கு கொண்டு வருவார்கள். கலைஞரும் வீரமணியும் இருக்கும் வரை இந்த வேலை இங்கு எடுபடாது.

தமிழர்களின் கனவு திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை பார‌திய ஜனதா கட்சியினர் முடக்க பார்க்கிறார்கள். நீங்கள் தானே ஆதம்ஸ் பால‌மஎன்றீர்கள். இன்று மணல் திட்டை பார்த்து ராமர் பாலம் என்று கூறுவது ஏன்? பாலம் இருந்தால் இலங்கைக்கு நடந்து போக வேண்டியதுதானே? சேது சமுத்திர திட்டத்துக்கு இடையூறாக உள்ள தடைகள், சதிகள் விரைவில் முறியடிக்கப்பட்டு திட்டம் நிறைவேற்றப்படும் என்பது உறுதி எ‌ன்று அமை‌ச்ச‌ர் வே‌ங்கடப‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்