தமிழகராதி, மொழிபெயர்ப்புக்கு முத‌ல்வ‌ர் ரூ.10 லட்சம் ‌நி‌தியுத‌வி!

Webdunia

சனி, 8 டிசம்பர் 2007 (13:09 IST)
தமிழ்ப் பேரகராதியை புதுப்பிக்க, சென்னை பல்கலைக்கழகத்துக்கும், திராவிட மொழிகளின் ஒப்பாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளுக்கு, குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்துக்கும் தலா ரூ.10 லட்சத்தை முதல்வர் கருணா‌நி‌தி வழங்கியு‌ள்ளா‌ர்.

இது குறித்து த‌‌மிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ் மொழி இலக்கியங்களைப் பிற திராவிட மொழிகளிலும், பிற திராவிட மொழி இலங்கியங்களை தமிழ் மொழியிலும் மொழி பெயர்த்திடும் திட்டப் பணிகளுக்காக, அதன் துணைவேந்தர் லட்சுமிநாராயணாவிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

மேலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தயாரிக்கப்பட்டு ஒரு லட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்களுக்குரிய விளக்கங்களுடன் 7 தொகுதிகளாக வெளியிடப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியை ஆய்வு செய்து புதிய சொற்களை சேர்த்து புதுப்பிக்க சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமச்சந்திரனிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் வழங்கினார் எ‌ன்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்