‌கிராம‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்ற மரு‌த்துவ‌ர்க‌ள் மு‌ன்வர வே‌ண்டு‌ம்: கலா‌ம் வே‌ண்டுகோ‌ள்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (10:45 IST)
''ஒ‌வ்வொரு மரு‌த்துவ‌ர்களு‌ம் ‌‌கிராம‌ங்க‌ளி‌ல் ப‌ணியா‌ற்ற மு‌ன்வர வே‌ண்டு‌ம்'' எ‌ன்று மு‌ன்னா‌ள் குடியரசு‌‌த் தலைவ‌ர் அ‌ப்து‌ல் கலா‌ம் வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை போரூ‌ர் ராம‌ச்‌ச‌ந்‌திரா மரு‌த்துவ ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ல் ரூ.5 கோடி செல‌வி‌ல் டிரைசெ‌ல் ‌ஸ்டெ‌ம் செ‌ல் மைய‌‌த்தை ‌திற‌ந்து வை‌‌த்து அ‌ப்து‌ல் கலா‌ம் பேசுகை‌யி‌ல், இ‌ந்‌தியா‌வி‌‌ல் உ‌ள்ள ஏழைகளு‌க்கு‌ம் ந‌வீன மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சைக‌ள் ‌கிடை‌க்க வே‌ண்டு‌ம். அத‌ற்கு முத‌லி‌ல் ஒ‌‌வ்வொரு குடு‌‌ம்ப‌த்‌திலு‌ம் அனைவரு‌ம் மரு‌த்துவ இ‌ன்சூர‌ன்‌ஸ் பா‌லி‌சி எடு‌க்க வே‌ண்டு‌ம்.

மரு‌த்துவ‌ர்க‌ள் ‌கிராம‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ஆர‌ம்ப சுகாதார ‌நிலைய‌ங்க‌ளி‌ல் க‌ண்டி‌ப்பாக சேவை செ‌ய்ய மு‌ன்வர வே‌ண்டு‌ம். குறை‌ந்த ப‌ட்ச‌ம் ஒரு மரு‌த்துவ‌ர் ‌கிராம‌ப் புற‌ங்க‌ளி‌ல் 50 பேரு‌க்காவது ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அ‌ப்து‌ல் கலா‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்