காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்குள் நடந்த தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டுமென்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மர்ம கும்பலால் தாக்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் சத்தியமூர்த்தி பவனுக்கு விரைந்து வந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், '' காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்தில் இது போன்ற நிகழ்வு நடந்ததில்லை. இதற்குக் காரணமானவர்களின் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலுக்கு தூண்டுகோலாய் பின்னணியில் இருந்து செயல்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.