அமராவதி ஆற்றில் வெள்ள அபாயம்!

Webdunia

வெள்ளி, 26 அக்டோபர் 2007 (20:19 IST)
ஈரோடு மாவட்டம் தாராபுரம் பகுதி அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடுமையான மழை பெய்து வருகிறது. காவிரி, பவானி, அமராவதி, மேட்டூர், திருமூர்த்தி, பாலாறு, பொறுந்தலாறு, குதிரையாறு உட்பட பல்வேறு அணைகள் நிரம்பி வருகிறது.

உடுமலை அமராவதி அணை, குதிரையாறு ஆகிய அணைகளில் நீர் பிடிப்பு பகுதிகளிலும், தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் பெய்த மழையால் காட்டா‌ற்று வெள்ளம் அமராவதி ஆற்றில் கலந்து தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

ஈரோடு மாவட்டம் தாராபுரம் கோட்டா‌ட்சியர் கற்பகம், தாசில்தார் நந்தகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்