கோவை தொடர் வெடிகுண்டு வழக்கில் மேலும் ஐந்து பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு வழக்கில் 70 பேர் மீது குற்றச்சாட்டுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 65 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எஞ்சியுள்ள 5 பேருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. பக்ரூதின், என்.சாகுல் ஆகியோருக்கு தலா 13 ஆண்டு சிறை தண்டனையும், முஜ்பூர் ரஹ்மான், மற்றொரு முஜ்பூர் ர்ஹமான் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், எஸ்.கே.முகமது அலிக்கு ஆயுள் சிறை தண்டனையும் வழங்கி தனி நீதிபதி உத்ராபதி தீர்ப்பளித்தார்.