பாலியல் கல்விக்கு மாணவ, மாணவிகள் ஆதரவு!

Webdunia

செவ்வாய், 23 அக்டோபர் 2007 (18:15 IST)
பாலியல் ச‌ம்ப‌ந்தமான பாட‌த் ‌தி‌ட்ட‌த்தை நடைமுறை‌‌ப்படு‌த்துவது கு‌றி‌த்து கரு‌த்து கே‌ட்க வ‌ந்த குழு‌விட‌ம் மாணவ, மாண‌விக‌‌ள் ஆதரவு தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பாலியல் ப‌ற்‌றி ச‌ரியாக அ‌றி‌ந்து கொ‌ள்ளாத காரண‌த்தா‌ல் ‌சிறு வய‌தி‌ல் க‌ர்‌ப்ப‌ம், பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் உ‌ள்பட ப‌ல்வேறு ச‌ம்பவ‌ங்க‌ள் நட‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் பள்ளிக் கூடங்களில் ' பாலியல் ' கல்வியை நடை முறைப்படுத்த ம‌த்‌திய அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. இத‌ற்கு ஆர‌ம்ப க‌ட்ட‌த்‌திலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா, கோவா உள்பட 7 மாநிலங்களில் இக்கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் அங்கு நடை முறைப்படுத்தவில்லை.

இதனால் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை பாலியல் சம்பந்தமான பாடத் திட்டத்தை நடைமுறைபடுத்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்தது.

ஆனால் தமிழக பள்ளி வளர் இளம் பருவ கல்வி திட்டத்தை நடை முறைப்படுத்துவது குறித்து பெ‌ற்றோ‌ர், மாணவ, மாண‌விக‌ள், ஆசிரியர்கள் தொண்டு நிறுவனங்கள், கல்வியாளர்கள், சமய அமைப்புகளிடமகருத்து கேட்க டெல்லியில் இருந்து வெங்கையா நாயுடு எம்.பி. தலைமையில் குழு இன்று சென்னை வந்தது.

இ‌ந்த குழு‌வி‌ல் நந்தி எல்லையா, நாராயண சாமி, அல்கா பல்ராம், மாயா சிங், வீரேந்திர பாட்டியா, மொய்னல் அசன், தங்க தமிழ் செல்வன், சுபாஷ் பிரசாத் யாதவ், தினேஷ் திரிவேதி ஆகிய நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் உ‌ள்ளன‌ர்.

சைதாப் பேட்டை மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு இக் குழுவினர் முத‌லி‌ல் சென்று கருத்து‌க்க‌ள் கேட்டனர். ‌பி‌ன்ன‌ர் ம‌யிலாப்பூரில் உள்ள பி.எஸ்.சீனியர் சி.பி.எஸ்.இ. மேல் நிலைப்பள்ளிக்கு சென்று கருத்து கேட்டனர்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப் பாட்டுச் சங்க அதிகாரிகளிடமும், ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகளிடமும் இத் திட்டம் மாணவர்களுக்கு எப்படி கொண்டு செல்லப்படுகிறது என்று கேட்டனர்.

அதன் பிறகு மாணவ-மாணவிகளிடமும், பெற்றோர்களிடமும் பாலியல் கல்வி பற்றி குழுவினர் கருத்து கேட்டனர். ‌அ‌ப்போது அவ‌ர்க‌ள் பாலியல் கல்வி முறை அவசியம் தேவை என்றும், இதனால் மாணவ சமுதாயம் பயன் அடையும் என்றும் தெரிவித்தனர்.

பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பாலியல் கல்வி திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

பாலியல் கல்வியின் அவசியத்தை உணர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் கருத்துக்களை கூறினர்.

பாலியல் கல்வி மாணவ சமுதாயத்துக்கு அவசியம் தேவை. வாழ்க்கையின் முக்கிய பங்காக இருக்கும் பாலியல் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் போது தவறு செய்ய மாட்டார்கள். பாலியல் என்பதை தவறாக கருதாமல் வாழ்க்கையாக நினைக்க வேண்டும் எ‌ன்று ‌பிள‌ஸ் 2 மாண‌வி ‌ஸ்ரு‌தி கூ‌றினா‌ர்.

பாலியல் பாடத்திட்டத்தின் மூலம் நிறைய விவரங்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு மாணவியும் சரியான பாதையில் செல்ல இக்கல்வி முறை உதவுகிறது. அதனால் இத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் எ‌ன்று மாணவி ஜெயசாரதி வ‌லியுறு‌த்‌தினா‌ர்.

பாலியல் கல்வி திட்ட‌த்தை ப‌ள்‌ளி‌யி‌‌ல் அம‌ல்படு‌த்‌தினா‌ல் பொறுப்புள்ள மாணவியாக நடந்து கொள்வதோடு எய்ட்ஸ், எச்.ஐ.வி. பற்றி அறிந்து கொள்ள முடியும். எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் உள்ள நாட்டிற்கு க‌ண்டி‌‌ப்பாக இது தேவை எ‌ன்று ‌சேலையூ‌ர் சியோ‌‌ன் மெ‌ட்‌ரி‌க் ப‌ள்‌ளி மாண‌வி ஆஷிகா தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

எய்ட்ஸ்க்கு இன்னும் மருந்து கொண்டு பிடிக்க முடியவில்லை. கல்வி மூலம் தான் இதை கண்டு செல்ல முடியும். எய்ட்ஸ், விபசாரம், சிறுவயதில் கர்ப்பம் போன்றவற்றை தவிர்க்க இக் கல்வி முறை அவசியம். இத‌ன் மூல‌ம்தா‌ன் மாணவ‌ர்க‌ளி‌ட‌ம் ‌வி‌ழி‌ப்புண‌ர்வு ஏ‌ற்படு‌த்த முடியு‌ம் எ‌‌ன்று மாண‌வ‌ர் ராம்குமார் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்