ராமர் பாலத்தை இழக்க மாட்டோம்: ராம கோபாலன்!

Webdunia

செவ்வாய், 23 அக்டோபர் 2007 (15:02 IST)
''எதை இழந்தாலும் ராமர் பாலத்தை இழக்க மாட்டோம்'' எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி தலைவ‌ர் ராம கோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, சேது சமுத்திர திட்டம் நிறைவேறியே தீரும், அடுத்த ஆண்டு நவம்பரில் கப்பல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இ‌த்திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் யாருக்குமே ஆட்சேபணை இல்லை எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி தலை‌வ‌ர் ராம கோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சங்கடம் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த திட்டத்தை கைவிடத் தயாராக மத்திய அரசு இருப்பதாக தோன்றுகிறது. இந்த திட்டத்தை ஏதாவது சாக்கு, போக்கு சொல்லி நிறைவேற்றாமல் இருக்க டி.ஆ‌ர்.பாலு நினைக்கிறார் என்றே தோன்றுகிறது என ராம கோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சேது சமுத்திர திட்டத்தை யாருமே எதிர்க்காத நிலையில், எதிர்க்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று இவர்களும், கூட்டணி கட்சிகளும் கீறல் விழுந்த ரெக்காடு போல பல்லவி பாடுவதை விட்டு விட்டு, ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டுகிறோம். எதை இழந்தாலும் ராமர் பாலத்தை இழக்க மாட்டோம் எ‌ன்று இ‌ந்து மு‌ன்ன‌ணி தலைவ‌ர் ராம கோபால‌ன் எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்