சபாநாயகர் மீது தொப்பி வீ‌ச்சு: இன்று தீர்ப்பு!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (12:03 IST)
த‌ன் ‌‌மீது தொப்பி வீசி கலவரம் செய்த அ.தி.மு.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ரமீது எ‌ன்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌மஎ‌‌ன்பதகு‌றி‌த்தசபாநாயகர் ஆவுடையப்பன் இ‌ன்று ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌க்‌கிறா‌ர்.

எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அளித்த பேட்டி குறித்து சட்டசபையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில். சபாநாயகர் மேஜைக்கு அருகே அ.தி.மு.க. ச‌ட்டம‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளகோஷமிட்டனர். அப்போது அவைக் காவலர் அணியும் தொப்பி ஒன்று சபாநாயகர் ஆவுடையப்பன் மீது விழுந்தது.

அதைத் தொடர்ந்து சட்டசபையில் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் வெளியிட்ட அறிவி‌‌ப்‌பி‌ல், அவையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் செய்த கலவரத்தில் அவைக் காவலர் தாக்கப்பட்டார். அவரது தொப்பியை எடுத்து என் மீது வீசியது பற்றி அமைச்சர் துரைமுருகன் பிரச்சினை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சபையில் எடுக்கப்பட்ட வீடியோ படக்காட்சியை பார்த்து விட்டு, தீர்ப்பை 19ஆ‌மதேதி (இன்று) வழங்குவேன் எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்