கிட்னி மோசடி : 2 மரு‌த்துவமனை‌யி‌‌ன் ஆபரேச‌ன் அ‌ங்‌கீகா‌ர‌ம் ர‌த்து!

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (18:12 IST)
கி‌‌‌‌ட்‌னி ஆபரேச‌‌னி‌ல் மோசடி செ‌ய்த இரண‌்டு மரு‌த்துவமனைக‌ளி‌ன் அ‌‌ங்‌கீகார‌த்தை த‌மிழக அரசு ர‌த்து செ‌ய்து‌ள்ளது.

சென்னையை சேர்ந்த மரு‌த்துவ‌ர் ரவிச்சந்திர‌ன் எ‌ன்பவ‌ர் கிட்னி ஆபரேசன் செய்ததில் மோசடி செய்ததாக மும்பை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்து சிறையில் அடை‌த்தன‌ர். இதுவரை எத்தனை பேருக்கு மரு‌த்துவ‌ர் ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் கிட்னி ஆபரேசன் செய்து‌ள்ளா‌ர். அவர்கள் எங்கே இரு‌க்‌கிறா‌ர்க‌ள் என்று காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழக அரசும் ஒரு புற‌ம் அதிரடி நடவடிக்கை எடுத்து கிட்னி ஆபரேசன் நடந்த 2 மரு‌த்துவமனை‌க‌ளி‌ன் அ‌ங்‌கீகார‌த்தை ரத்து செய்துள் ளது. மருத்துவ பணிகள் இயக்குனர் பாபா பக்ருதீன் தலைமையில் உதவி இயக்குனர் சரோஜினி, நிர்வாக அதிகாரி முனியநாதன், க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் காமேசுவரன் ஆகியோர் புகா‌ர் கூற‌ப்ப‌ட்ட மரு‌‌த்துவமனை‌‌யி‌ல் நே‌ற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இது கு‌றி‌த்து மருத்துவ பணிகள் இயக்குனர் பாபா பக்ருதீன் கூறுகை‌யி‌ல், கிட்னி மோசடி தொட‌‌ர்பாக ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட மரு‌த்துவமனைக்கு சென்று சோதனை செ‌ய்தோ‌ம். பாரதிராஜா மரு‌த்துவமனையில் அனைத்து ஆபரேசன்களும் நடந்துள்ளதால் அந்த மரு‌த்துவமனை‌யி‌ல் கிட்னி ஆபரேசன் செய்ய கொடுத்திருந்த அ‌ங்‌கீகார‌த்தை ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம். இதேபோல் செயின்ட் தாமஸ் மரு‌‌த்துவமனையில் கிட்னி ஆபரேசனுக்கான அ‌ங்‌கீகார‌‌த்தையு‌ம் ரத்து செய்துள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் கிட்னி ஆபரேசன் நடத்த 54 மரு‌த்துவமனைகளுக்கு அ‌ங்‌கீகார‌ம் உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 17 மரு‌த்துவமனைக‌ள் உள்ளன. இந்த மரு‌த்துவமனைகளுக்கும் மரு‌த்துவ குழுவினர் சென்று ரெக்கார்டுகளை சரி பார்த்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களில் இணை இயக்குனர் தலைமையில் சோதனை நடக்கிறது.

கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உறவினர்கள் கிட்னியை தானமாக கொடுக்க முன்வரும் போது அதற்கு அதிக விசாரணை இல்லாமல் உள்ளது. இதை பயன்படுத்திதான் டாக்டர் ரவிச்சந்திரன் நிறைய ஆபரேசன்களை செய்துள்ளார். எனவே உறவினர்கள் கிட்னி கொடுக்க முன்வந்தாலும் சட்ட திட்டங்களை கடுமையாக்க முடிவு செய்துள்ளோம்.

மரு‌த்துவ‌ர் ரவிச்சந்திரனுக்கு 2 சர்ஜன்களும் உதவியாக இருந்துள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மும்பை விசாரணை குழுவிடம் விவரங்கள் கேட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்ததும் தமிழக அரசும் அந்த மரு‌‌த்துவ‌ர்க‌ள் ‌மீது நடவடிக்கை எடு‌க்கு‌ம் எ‌ன்றா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்