நெசவாள‌ர்களு‌க்கு ஆதரவாக ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயலலிதா!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (15:36 IST)
பள்ளி சீருடைகளுக்கான ரகத்தினை வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே வழங்குகின்ற முறையை கை‌வி‌ட்டு கைத்தறி தொழிலாளர்களின் நலன் கருதி தொடர்ந்து வருடம் முழுவதும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க.‌வின‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நட‌த்து‌வா‌ர்க‌ள் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

தி.மு.க. அரசு, கைத்தறி ஏற்றுமதி ரகங்களுக்கு கூலித் தொகையை குறைத்து வழங்கி வருவதாகவும், அவற்றை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று கூலித் தொகையை குறைக்காமல் வழங்க வேண்டும் என்றும் தொழிலாளர்களிடம் இருந்து பல்வேறு விதமான கோரிக்கைககள் வந்த வண்ணம் உள்ளன எ‌ன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

அரசு மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கி வந்த கடன் வட்டியை 9 ‌விழு‌க்கா‌ட்டி‌‌ல் இருந்து 12 ‌விழு‌க்காடாக இந்த அரசு உயர்த்தி இருக்கிறது. எனது ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட கைத்தறி நெசவின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு அரசு துறைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வந்ததை, தற்போதைய தி.மு.க. அரசு கைத்தறி உற்பத்தி செய்வதை நிறுத்திவிட்டு பவர்லூம் எனும் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்வதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தொழிலாளர்களின் நலன் கருதி அரசு துறைக்கான சீருடைகளை மீண்டும் கைத்தறி மூலமே உற்பத்தி செய்ய வலியுறுத்தியும், பள்ளி சீருடைகளுக்கான ரகத்தினை வருடத்திற்கு 3 மாதங்கள் மட்டுமே வழங்குகின்ற முறையை கை‌வி‌ட்டு கைத்தறி தொழிலாளர்களின் நலன் கருதி தொடர்ந்து வருடம் முழுவதும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க. ஈரோடு மாவட்டத்தின் சார்பில் வரு‌ம் 10ஆ‌ம் தே‌தி அன்று காலை 10 மணி‌க்கு சென்னிமலை பேரு‌‌ந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்