இசை பல்கலைக்கழகம்: கருணாநிதி அறிவிப்பு!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (17:44 IST)
தமிழ்நாட்டில் இசை பல்கலைக் கழகம் உருவாகி இந்தியாவுக்கு மாத்திரமல்ல உலகத்துக்கே பயன்படும் வகையில் இருக்கும் எ‌ன்று மு‌த‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி 1964-ல் எழுதிய கதை `உளியின் ஓசை' என்ற திரைப்படம் படமாகிறது. இப்படத்தின் தொடக்க விழா பிரசாத் ஸ்டூடியோவில் இன்று நடந்தது. முதல்- அமைச்சர் கருணாநிதி, படப்பிடிப்பை தொடங்கி வைத்து பேசுகை‌யி‌‌ல், `பராசக்தி' படத்துக்குப் பிறகு அரசு அலுவல் காரணமாக ஏவி.எ‌ம். திரைப்பட அரங்குக்கு தொடர்ந்து வர முடியாத நிலை எனக்கு இருந்தது. ஆனாலும் கூட என்னிடம் அன்பு கொண்டவர்கள் தயாரிக்கும் படங்களுக்கு அவ்வப்போது வந்து வாழ்த்து சொல்லி இருக்கிறேன் எ‌ன்றா‌ர்.

இப்போது, நானே எழுதிய ஒரு கதை திரைப்படம் ஆகும் நிலையில் அதை தொடங்கி வைக்க இங்கு வந்துள்ளேன். தஞ்சையில் 108 சிலைகளுக்கு பதில், 81 தான் உள்ளது. 20-க்கு மேல் கர்ணங்கள் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்ற அடிப்படையில் எனக்குள் உருவானதுதான் இந்த உளியின் ஓசை கதை எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

உளியின் ஓசை சரித்திர பின்னணி கொண்ட படம். சமூக படங்களை விட இதற்கு அதிக செலவு ஆகும் என்பதை உணர்கிறேன். மனோகராவுக்கு பிறகு நான் சரித்திர படங்களுக்கு கதை எழுதவில்லை என்று ஏவி.எம் சரவணன் குறிப்பிட்டார். பூம்புகார், காஞ்சித்தலைவன் போன்ற படங்களுக்கு எழுதியுள்ளேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌‌தி ‌‌நினைவுபடு‌த்‌தினா‌ர்.

காஞ்சித் தலைவன் படம் வெற்றி பெறாவிட்டாலும் அதில் நடித்த எம்.ஜி.ஆருக்கு புகழ் கிடைத்தது. அப்படத்தில் ஒரு பாடலில் காஞ்சி வெல்க என்று குறிப்பிட்டிருந்த வார்த்தையை தணிக்கைக் குழுவினர் நீக்கி விட்டனர். வாதாடி வெல்க என்பதை அனுமதித்தவர்கள் காஞ்சி வெல்க என்றதை எதிர்த்தார்கள். தணிக்கை குழு அதிகாரியிடம் இதுபற்றி கேட்டபோது, காஞ்சி என்று நீங்கள் குறிப்பிடுவது எது என்பது பற்றி எங்களுக்கு தெரியும் என்றார். பிறகு அது நீக்கப்பட்டு நாடு வெல்க என்று சேர்க்கப்பட்டது. இதனால் கிளைமாக்ஸ் காட்சி நினைத்த மாதிரி அமையவில்லை எ‌ன்று பழைய ‌ச‌ம்பவ‌ங்களை ‌நினைவு கூ‌ர்‌ந்தா‌ர் கருணா‌நி‌தி.

இங்கு பேசிய இளையராஜா தமிழ்நாட்டில் இசை பல்கலைக் கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நானும் இசைவு தெரிவிக்கிறேன். இசை பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் உருவாகி இந்தியாவுக்கு மாத்திரமல்ல உலகத்துக்கே பயன்படும் வகையில் இருக்கும். அதற்கு வலிமை தரும் பொறுப்பை நானும் இளையராஜாவுடன் சேர்ந்து ஏற்கிறேன் எ‌ன்று முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்