பாலன் கொலை: 15 பேருக்கு ஆயுள் உறுதி!

Webdunia

சனி, 6 அக்டோபர் 2007 (16:11 IST)
மு‌ன்னா‌ள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் பால‌ன் கொலை வழ‌க்‌கி‌ல் ‌கீ‌ழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் 15 பேரு‌க்கு ‌வி‌தி‌த்த ஆயு‌ள் த‌ண்டனையை செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உறு‌தி செ‌ய்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

1991ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது சைதாப்பேட்டை தொகுதி ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினராக இருந்தவர் எம்.கே.பாலன். இவ‌ர் 2000ஆம் ஆண்டில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆ‌ம் தேதி காலை‌யி‌ல் நடைப‌யி‌ற்‌சி‌க்கு செ‌ன்றபோது எம்.ஆர்.சி.நகர் பகுதியில் அவரை மர்ம கும்பல் ஒ‌ன்று கா‌ரி‌ல் கட‌த்‌‌தியது.

இது தொடர்பாக அவரது மனை‌வி காவ‌ல் ‌‌துறை‌யி‌ல் புகார் செய்தா‌ர். இதையடுத்து எம்.கே. பாலனின் மகன் மணிமாறன் காணாமல் போன தனது தந்தை பாலனை கண்டுபிடித்து தரும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆ‌ட்கொண‌ர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது ‌விசாரணை நட‌த்‌திய நீதிபதிகள், எம்.கே.பாலனை கண்டு பிடித்து தரும்படி சி.பி.சி.ஐ.டி.‌ விசாரணை நடத்துவதற்கு அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஆனா‌ல் காணாம‌ல் போ‌ய் 5 மாதங்களாகியும் அவரைப்பற்றி எந்தவித துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாலனை கடத்திச்சென்ற கும்பல் தாம்பரத்தில் உள்ள ஒரு சேமியா பேக்டரியில் வைத்து அவரை கொலை செய்ததாகவும், பின்னர் அவரது பிணத்தை எடுத்துச் சென்று எருக்கஞ்சேரி சுடு காட்டில் வைத்து எரித்து விட்டதாகவும் சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌‌ரி‌வி‌த்தன‌ர்.

இதனிடையே இ‌ந்த கொலை தொடர்பாக பாலமுருகன் என்பவரைப் பிடித்து காவ‌ல்துறை‌யின‌ர் விசாரணை நட‌த்‌தின‌ர். விசாரணையில், செந்தில் குமார் என்பவன் எம்.கே. பாலனை கடத்திச் சென்றதாகவும், ரூ.1 கோடி பிணையத்தொகையாக கேட்டு எம்.கே.பாலனை தர மறுத்தால் கொலை செய்வதாகவும் பாலமுருகன் தெரிவித்தான். அ.தி.மு.க. பிரமுகர் பூங்காநகர் மாணிக்கமும் இதற்கு உடந்தையாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பூங்காநகர் மாணிக்கம், செந்தில்குமார், சோமு (எ) சோமசுந்தரம், சம்பத், அன்பு, ஹரிகரன், ரோமிதா மேரி, உதயகுமார், செல்வம், பாலமுருகன், நரைமூடி கணேசன், நீலா சங்கர், இருதயராஜ், சங்கர்கணேஷ், சாமிக்கண்ணு, ரமேஷ், ஜெகன், குணசேகர் ஆகிய 18 பேர் மீது காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்தனர்.

இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த சென்னை விரைவு நீதி மன்ற‌ம், 19-4-2004 அன்று தீர்ப்பு அளி‌த்தது. அதில், ரோமிதா மேரி, நரைமுடி கணேசன் ஆகியோரை ‌விடுதலை செ‌ய்தது. மீதமுள்ள 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 16 பேரும் சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அப்பீல் செய்தனர். அப்பீல் மனு 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடந்த மாதம் இறு‌தி ‌விசாரணை முடி‌ந்து ‌தீ‌ர்‌ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தீர்ப்பு அ‌ளி‌த்தது. அ‌தி‌ல், நீலாசங்கர் விடுதலை செ‌ய்து பூங்காநகர் மாணிக்கம், செந்தில்குமார், உள்பட 15 பேரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், 9-வது மற்றும் 11-வது குற்றவாளிகளின் வாக்குமூலத்தை பார்க்கும் போது எம்.கே.பாலனை இவர்கள் கொன்றது தெரியவருகிறது. காவ‌ல்துறை தரப்பில் இந்த கொலையை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளனர். எனவே 15 பேருக்கும் கீழ் ‌நீ‌திம‌ன்ற‌ம் விதித்த ஆயுள் தண்டனை செல்லும். இதை உறுதி செய்கிறோம். குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் நீலா சங்கரின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்