வழக்கறிஞர்களை தாக்கிய காவலரை கைது செய்யக்கோரி, தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் காலவரையின்றி நீதிமன்றங்களை புறக்கணிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மதிவாணன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது ஆட்டோ மோதி காயம் அடைந்தார். அவரை சில வழக்கறிஞர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவமனை ஊழியருக்கும், வழக்கறிஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் காவலர் ஒருவர் தாக்கியதாகவும், 3 வழக்கறிஞர்கள் காயமடைந்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.
வழக்கறிஞர்களை தாக்கிய தலைமை காவல் நடேசனை கைது செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று நீதிமன்றம் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், வழக்கறிஞர்களை தாக்கிய தலைமை காவலரரை கைது செய்யும் வரை, காலவரையின்றி தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களை புறக்கணிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற பெண்கள் வழக்கறிஞர்கள் சங்க கூட்டம் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது. அதில், நீதிமன்றங்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்வதென முடிவு எடுக்கப்பட்டது