சேதுசமுத்திர திட்டத்தை எதிர்க்கவில்லை: ராமகோபாலன்!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (11:09 IST)
சேது சமு‌த்‌திர ‌தி‌ட்ட‌த்தை யாரு‌ம் எ‌தி‌ர்‌க்க‌வி‌ல்லை எ‌ன்று இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த சில மாதங்களாக சேது சமுத்திர திட்டம் பற்றி எழுந்துள்ள பிரச்சினைகள் பல கேள்விகளால் தமிழர்கள் மத்தியில் ஒரு `திகில்' எழுந்துள்ளது. திட்டம் நிறைவேறாமல் போனால் என்ன செய்வது? என்ற `திகில்'தான் என்று முலமைச்சர் கருணாநிதி பேசியுள்ளார். மத்திய அமை‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் தாக்கி பேசியுள்ளார் எ‌ன்று ராமகோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இவர்கள் சொல்வது போல சேதுசமுத்திர திட்டத்தை யாருமே எதிர்க்காத நிலையில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்பது விளங்கவில்லை. நீதிமன்றம், நீதிபதிகள் போன்றவற்றை எல்லாம் அவமதித்து பேசிய தலைவர்கள், கட்சியின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை எனில் நீதித்துறை, ஜனநாயகம் போன்றவற்றின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிடும் என ராமகோபால‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்