தி.மு.க. வினர் போராட்டம் தொடர்கிறது!

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (14:01 IST)
ா.ஜ.க.வின் மக்களவை முன்னாள் உறுப்பினர் வேதாந்தி, தமிழக முதலமைச்சருக்கு எதிராக மத உத்தரவு பிறப்பித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று மூன்றாம் நாளாக தி.ு.க தொண்டர்கள் மாநிலத்தின் பல பகுதிகளில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வரும், ி.ு.க தலைவருமான கருணாநிதி, தொண்டர்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்தார்.

ஆனால் இன்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் தி.மு.கவினர், தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் விதத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக, காவல்துறை மாநில தலைமையகத்திற்கு வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரையில் அதிகாலை தி.ு.க. தொண்டர்கள் பா.ஜ.க.வின் மண்டல தலைவர் ஏ.எம். கவுண்டர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த பஜாஜ் பிளாட்டினம் மோட்டார் பைக்கிற்கு தீ வைத்துக் கொளுத்தினர்.

பல பகுதிகளில் தி.ு.க.வைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக் கம்பத்தை வெட்டி சாய்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மயிலாடுதுறையில் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள், தங்கள் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டாஸ்மார்க் கடையின் மீது கல்வீசித் தாக்கினர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுர்கத்தில், செப்டம்பர் 23 ந் தேதியன்று தி.ு.க வினர், மத உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடைகளை அடைக்கும் படி வற்புறுத்தி, கடைகளை அடைக்க வைத்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 500க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் திறக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்