விஸ்வ இந்து பரிஷத்தைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தியை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை பெரியார் சிலை அருகே இன்று காலை போராட்டம் நடந்தது. அதில் வேதாந்தியின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், முதல்வர் கருணாநிதியை அவமதித்து பேசிய இந்து பரிஷத் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.