கே‌‌பி‌ள் டி.‌வி. ஆபரே‌ட்ட‌ர்க‌ள் மறிய‌ல்!

Webdunia

ஞாயிறு, 23 செப்டம்பர் 2007 (12:53 IST)
டி.டி.எ‌ச். ஒ‌ளிபர‌ப்பு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்க‌ம் கோவை‌யி‌லநாளை ம‌றிய‌ல் போரா‌ட்ட‌‌ம் நட‌‌த்து‌கிறது.

சன் குரூப் சார்பாக கேபிள் இல்லாமல் வீடுகளுக்கு டி.டி.எச். ஒளிபரப்பு மாதக் கட்டணம் ரூ.75க்கு வழங்கப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது. இது தமிழகம் முழுவதும் உள்ள 2 லட்சம் கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் குடும்பங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது எ‌ன்று தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், ஜாகீர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

முதலமைச்சர் கருணாநிதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த ஒருசில தினங்களிலேயே தென்மாநில கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கே பேரதிர்ச்சி தரக்கூடிய தகவலை தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என கூ‌றியு‌ள்ளன‌ர்.

கேபிள் டி.வி. மூலமாக மட்டுமே பொதுமக்களுக்கு பெரும்பாலான கட்டண சேனல்களை குறைந்த கட்டணத்தில் கொடுக்க முடியும். மேலும் பொதுமக்களை ஏமாற்றும் விதத்தில் கவர்ச்சிகரமான தகவல் வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் மறைமுக கட்டணத்தையும் அறிவித்துள்ளது பொது மக்களை ஏமாற்றும் செயலாகும் எ‌ன்று குறை கூ‌றியு‌ள்ளன‌ர்.

பொது மக்களின் நலன் கருதியும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் நலன் கருதியும் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவிக்கும் பொருட்டு நாளை (திங்கட்கிழமை) கோவை செஞ்சிலுவை சங்கம் முன் மறியல் போராட்டம் நடக்கிறது எ‌‌ன்று தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல‌ ச‌ங்க‌ம் கூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்