ஈரோடு அருகே அரசுப் பேருந்து ஜப்தி

Webdunia

புதன், 29 ஆகஸ்ட் 2007 (11:44 IST)
ஈரோடு அருகே அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் "ஜப்தி' செய்தனர்.

ஈரோடு மாவட்டம கோபி அருகே உள்ளது கெட்டிசேவியூர். இப்ப பகுதியை சேர்ந்த செல்லப்பன் என்பவரது மகன் குமார் (25). 2004ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி கோபி அவிநாசி மெயின் ரோட்டில் சென்றகொண்டிருந்தபோது அவர் மீது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதியது. இதில் அவர் இடது தொடை எலும்பு முறிந்து பலத்த காயம் அடைந்தார்.

காயம் அடைந்த குமார் ரூ. 5 லட்சம் நஷ்டயபடு கேட்டு முதல் கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் சேகருக்கு ரூ. 4 லட்சத்து ஆயிரத்து 390 வழங்க உத்தரவிட்டது. அரசு போக்குவரத்து கழகம் குறிப்பிட்ட நாளில் நஷ்டயீடு வழங்காததால், நஷ்டயீடு பெற்று தரக்கோரி கோபி முதன்மை சார்ப்பு நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்படி நீதிமன்ற ஊழியர்கள் கோபி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கோபி கோவை செல்லும் அரசுப் பேருந்தை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்