இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு-காவல்துறை

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (12:35 IST)
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை எடுத்து வருகிறது.

இது குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குனர் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறை, பொது மக்களுடன் இணைந்து நடமாடும் நூலகங்கள் மற்றும் வேலை வழிகாட்டி நலத் திட்டங்களை அறிமுகம் செய்யவுள்ளது என்றார்.

வேலையற்ற இளைஞர்களுக்கான தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் இங்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் நக்சலைட்டுகள் இங்கு வலுவாக காலூன்ற முடிவதில்லை என்று அவர் மேலுமகூறினார்.

தேனி உள்ளிட்ட தமிழகத்தின் வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த நக்சலைட்டுகள் அப்பகுதிகளிலும் தோல்வி அடைந்து வருகின்றனர் என்றார் அவர்.

மேலும், அனைத்துக் காவல் நிலையங்கள் மற்றும் காவல்படைகளினபிரிவுகள் அதாவது கடற்கரை பாதுகாப்பு பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளும் கணினிமயமாக்க மாநிலல அரசு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது என்றார்.

கடற்கரை பகுதிகள் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவுகின்றனர் என்பதை கடுமையாக மறுத்த முகர்ஜி இதனை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்