சென்னை விமான நிலையத்திற்குள் இரவு நேரங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் செல்லும் பயணிகளின் உறவினர்களோ அல்லது விமானத்தில் வரும் பயணிகளை அழைத்து செல்ல வருவோரும் இரவு நேரங்களில் காமராஜர் விமான நிலையம் மற்றும் அண்ணா சர்வதேச விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வரும் புதன்கிழமை இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தடை ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும், விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்களும், பொருட்களும் கடுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.