சேலம் ரயில் கோட்டம் : திங்கட் கிழமை ரயில் மறியல் போராட்டம்

Webdunia

சனி, 28 ஜூலை 2007 (09:58 IST)
சேலம் ரயில்வகோட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் கேரள அரசைக் கண்டித்து வருகிற திங்கட் கிழமை அம்மாநிலத்திற்குச் செல்லும் ரயில்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டம் நடத்துவதென்று அனைத்து கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் உள்ள கோவை, ஈரோடு, சேலம் ரயில் பாதைகள் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு கோட்டத்தின் கீழ் வருகின்றன. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள ரயில் பயணிகள் சிரம்மத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களை பிரித்து சேலத்தில் புதிய கோட்டம் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இத்திட்டத்திற்கு கேரள அரசு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று கோவையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, பாமக, மதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சேலம் ரயிவே கோட்டம் அமைக்க தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் கேரள அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும, கேரளத்தைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கேரள அரசும் இவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பல ஆண்டுகள் போராடிப் பெற்றுள்ள சேலம் ரயில்வே கோட்டம் பறிபோகாமல் தடுக்க வேண்டியது கடமையென்றும், எனவே வருகிற ஜூலை 30 ஆம் தேதி ( நாளை மறு நாள் ) ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்