8,795 அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம்

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (12:50 IST)
நடப்பு ஆண்டில் புதிதாக 8,795 அங்கன்வாடி பணியாளர்களை நியமிக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி பணியாளர்கள் சங்க மாநில மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக அரசு பொறுப்பேற்ற உடன் 1,922 குழந்தைகள் மைய பணியாளர்கள், 4,966 அங்கன்வாடி உதவி பணியாளர் இடங்கள் நிரப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், நடப்பு ஆண்டில் 2,361 பணியாளர்கள், 6,434 உதவியாளர்களை நியமிக்க அரசு அனுமதியளித்திருப்பதாக கூறினார். நடப்பு ஆண்டில் புதிதாக 4,707 குழந்தைகள் மையங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்