தினம் ஒரு குற்றவாளி-லத்திகா

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (10:41 IST)
தினமும் ஒரு குற்றவாளியையாவது கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல்துறை காவலர்களுக்கு ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார்.

ஓட்டேரி காவல் நிலையத்திற்கான புதிய கட்டடத்தையும், புளியந்தோப்பு துணை ஆணையர் அலுவலகத்தையும் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் நேற்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லத்திகா சரண், சென்னை நகரில் புதிதாக நடக்கும் கிரில் கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

வழக்குகளில் சம்பந்தப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளில் தினமும் ஒருவரையாவது பிடிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளேன்.

கைது உத்தரவு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன் என்றும் லத்திகா சரண் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்