சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் மேளாலர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜேந்திரர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேர் மட்டும் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இந்நிலையில் வழக்கறிஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
எனவே வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணராஜா வருகிற ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.