கூட்டுறவு சங்கத் தேர்தல் முறைகேடுகளை முதலமைச்சர் கருணாநிதி குறைந்து மதிப்பிடுவது சரியல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கூட்டுறவு தேர்தலை நேர்மையாகவும், ஜனநாயக பூர்வமாகவும் நடத்தக் கோரி முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தலை முறைகேடுகளாக நடத்தி உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல்கள் அனைத்தையும் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக கூறியுள்ள என். வரதராஜன், ரத்து செய்யப்பட்ட நிலையில், 25 இடங்களில் மட்டுமே பிரச்சனை என்பதை அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் பூதாகரப்படுத்தி விட்டன என்று முதலமைச்சர் கருணாநிதி குறைத்து மதிப்பிடுவது சரியல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.